Category இலங்கை

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி; குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை.!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றனர் என்றும், 2018 தொடக்கம் 2020…

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம்,…

செம்மணிக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம்

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழிக்கு இலங்கை அரசும் சர்வதேசமும்  முறையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கிறிஸ்தவ ஒன்றியம்  கோரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பில் யாழ்.கிறிஸ்தவ ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது,  இக்கொலைகளை மேற்கொண்ட இலங்கை அரசு, அதற்கு உதவிய சர்வதேச நாடுகள் அனைத்தினதும் பொறுப்பற்ற கொலை முன்னெடுப்புகள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் என…

பொலிஸ் விசேட அதிரடி படையின் துப்பாக்கி சூட்டில் நபரொருவர் உயிரிழப்பு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர். …

வெலிக்கடை சிறைப்படுகொலை தொடர்பில் விசாரணை வேண்டும்

நாட்டில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடை சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் உள்ள இடங்களையும் அரசு கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  நாடாளுமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜூலை…

சிறு பராயத்தினரை சமூக தொடர்பு மற்றும் விளையாட்டில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும்

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற தேசிய முன்பிள்ளை பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாளில் கலந்து கொண்ட போதே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கைப்பேசி பயன்பாடு இளம்…

செம்மணியைத் தோண்டுவது தேவையற்றது

யுத்தம் நடந்த மண்ணில் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் மனிதப்…

செம்மணி எங்களிற்கு அந்த கதவையும் திறக்கவைத்துள்ளது

செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செம்மணி ஜெனீவாவில் இருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை கொச்சைப்படுத்தி முடக்குகின்ற கடைசிகட்டத்தை மாத்திரம் விசாரிக்க சொல்கின்ற அந்த முயற்சியை கேள்விக்குட்படுத்தி, அது விரும்பியளவிற்கு பின்னிற்கு சென்று மக்களிற்கு…

கண்டியில் விபத்து – மூவர் உயிரிழப்பு

கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த கோர விபத்து கண்டி- ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதி  ஹபரகெட்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் பள்ளத்தில் விழுந்து நேற்றைய தினம் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.  விபத்தில்  இரு பெண்கள், ஆண் என மூவர் உயிரிழந்துள்ளதுடன்  ஐந்து  பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு…

இலங்கைக்கான படையெடுப்பு?

இலங்கைக்கான படையெடுப்பு? தூயவன் Saturday, July 19, 2025 இந்தியா, இலங்கை தென்னிந்திய நடிகர்களது இலங்கைக்கான படையெடுப்பு தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயம் ரவி என்றழைக்கப்பட்ட ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது…