நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் புத்தகம் விற்கப்படவில்லை: காவல் துறை அறிக்கை

Download 6 2

சென்னையில் நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் விற்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் சென்னை நடைப்பெற்ற 49-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடப்படும் என இணையதளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி குறித்து தவறாக சித்தரிக்கும் புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தக கண்காட்சியில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைப்பெற்ற புத்தக கண்காட்சியில் தீவிர சோதனை நடத்தப்பட்டதாகவும், கீழைக்காற்று பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இரு அரங்குகளில் சோதனை செய்த போது சம்பந்தப்பட்ட புத்தகம் எதுவும் அங்கே விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் கீழைக்காற்று பதிப்பக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அப்போது அவர்கள் அளித்த எழுத்துப்பூர்வமான விளக்கத்தில், சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம் கண்காட்சியில் வெளியிடப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லை என்று உறுதியளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Related Posts

Bike20202520Uk202026020422 2

பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700
மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றிய உரைகள் இடம்பெற்றன.
பிரான்சில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் அதற்கு மத்தியில் பலரும் கலந்துகொண்டு கைகளில் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் கறுப்புக் கொடிகளை ஏந்தித் தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிறைவாகத் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.

Read more
Jjkkk2004 02 20262022 43 19

https://www.pathivu.com/2026/02/blog-post_317.html

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்த நேரம் முடிந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் புதிய START என அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்று புதன்கிழமை கிழக்கு நிலையான நேரப்படி (0500 வியாழன் UTC) இறுதிக்குள் காலாவதியாக உள்ளது.
போப் லியோ XIV உட்பட முக்கிய உலகத் தலைவர்கள் ஒப்பந்தத்தின் நீட்டிப்பு அல்லது பாதுகாப்பிற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
START என்பது மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தைக் குறிக்கிறது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மிகச் சமீபத்திய இருதரப்பு ஒப்பந்தம் 2010 ஆம் ஆண்டு பராக் ஒபாமா மற்றும் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதிகளாக கையெழுத்திடப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி குறைப்பு குறித்த மீதமுள்ள கடைசி ஒப்பந்தமாகும். இதுபோன்ற முதல் ஏற்பாட்டை 1972 இல் கையெழுத்திட்ட மூலோபாய ஆயுத வரம்பு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் (SALT-I) காணலாம்.
புதிய START ஒப்பந்தம், பயன்படுத்தப்பட்ட மூலோபாய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒவ்வொன்றும் 1,550 ஆகவும், மூலோபாய விநியோக வாகனங்கள் மற்றும் அமைப்புகளின் எ..

Read more
London20Protest2028229

ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் – இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள்
மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் இனவழிப்பு அரசாங்கத்திற்கு தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதில் பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை முன்னெடுத்திருந்தனர் .

Read more
Ct20Scan

தவறான நோயறிதல்: நுழையீரல் அகற்றப்பட்டது!

தவறான நோயறிதலுக்குப் பின்னர் பெண்ணின் ஆரோக்கியமான நுரையீரல் அகற்றப்பட்டது.ஆஸ்திரிய நாட்டின் ஸ்டைரியாவைச் சேர்ந்த 48 வயது பெண்மணியின் நுரையீரல் பகுதி தவறான புற்றுநோய் இருப்பதான நோயறிதலைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது.
மற்றொரு தவறான புற்றுநோய் நோயறிதல் ஆஸ்திரிய சுகாதார அமைப்பை உலுக்கியுள்ளது.
அந்தப் பெண் செப்டம்பர் 2024 இல் காய்ச்சல், சளி மற்றும் கடுமையான உடல் பலவீனத்துடன் கிராஸ் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மார்பின் CT ஸ்கேன் எடுக்க உத்தரவிட்டனர். இது அழற்சி மாற்றங்களைக் காட்டியது. ஆனால் கட்டி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை.
இருப்பினும், ஒரு திசு மாதிரி எடுக்கப்பட்டது. ஹிஸ்டாலஜிக்கல்-நோயியல் கண்டுபிடிப்புகள் அடினோகார்சினோமா, அதாவது நுரையீரல் புற்றுநோய். வழங்கப்பட்ட தகவல்களின்படி, மருத்துவர்கள் விரைவான நடவடிக்கையை அறிவுறுத்தினர் மற்றும் உடனடி அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
அறுவை சிகிச்சை இறுதியாக ஒரு தனியார் மருத்துவ..

Read more
Miss2

3271நாட்களாக நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம்!

இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் நாளை (பெப்ரவரி 04ஆம் திகதியை) , காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இன்றைய தினம் சுதந்திர தினம் அல்ல. எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில்,வன்னிப்பந்தலில் 3271நாட்களாக நாங்கள் நீதி கேட்டு அமர்ந்திருக்கிறோம். மழையிலும் வெயிலிலும், அரசுகள் மாறினாலும், வாக்குறுதிகள் மாறினாலும், எங்கள் கேள்வி மட்டும் மாறவில்லை.
ஆனால், அந்த சுதந்திரம் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. எங்கள் மொழியை மதிக்கவில்லை. எங்கள் நிலங்களை காக்கவில்லை. எங்கள் குழந்தைகளை எங்களிடம் திருப்பித் தரவில்லை. அவ்வகையில் இலங்கை சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூருகிறோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more