Wednesday, February 4, 2026 அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை இரண்டு கண்டைனர்களில் போதைப்பொருள்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச புலனாய்வு சேவைகள் அறிவித்திருந்தும் அவற்றை விடுவித்ததும் போதைப்பொருள் கண்டைனர் வெளியே சென்ற போது ஆட்சியில் இருந்ததும் நாங்கள் அல்ல என தான் சீ ஐ டி யிடம் வாக்குமூலம் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.மேலும் 323 கண்டைனர்களை வெளியே விட்டதும் தாங்கள் அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.இந்த அரசு தங்கள் பிழைகளை மூடி மறைக்க எம்மை அழைத்து விசாரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என அவர் கூறினார்.