⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக    குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும்  குரல் கொடுக்க வேண்டும். – Global Tamil News


மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் விமா்சனம் வைத்துள்ளாா் மன்னாரில் இன்று (பெப்ரவரி 3, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடபகுதி மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து பலமுறை முறையிட்டும், கடற்றொழில் அமைச்சர் இது குறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தூண்டிவிடப்படுவதாகவும், தமிழக முதலமைச்சர் நினைத்தால் இதனைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீனவர் பிரச்சினையில் ஏன் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்க மறுக்கிறார்கள் என அவர் சாடினார். அண்மைய புயல், வெள்ளம் மற்றும் இந்திய மீனவர்களால் சேதப்படுத்தப்பட்ட வலைகளுக்கு இதுவரையில் எந்தவிதமான நட்டஈடோ அல்லது நிவாரணமோ வழங்கப்படவில்லை. உள்ளூரில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தடுக்கும் அரசாங்கம், இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுப்பதில் பாராமுகமாக இருப்பது மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதே வடபகுதி மீனவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. Tag Words: #Mannar #FishermenCrisis #IndianTrawlers #NMAalam #SriLankaPolitics #LKA #TamilNaduElections2026 #LivelihoodAtRisk #NorthernProvince #BreakingNews

Related Posts

உலகின்-முதல்-ஆளில்லா-விமானம்-தனது-பயணத்தைத்-தொடங்குகிறது!

உலகின் முதல் ஆளில்லா விமானம் தனது பயணத்தைத் தொடங்குகிறது!

உலகின் முதல் ஆளில்லா கலப்பின விமானமான காய் ஹாங் YH-1000S, பெரிய சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்ட ஒரு வகை ட்ரோன், சீனாவின் சோங்கிங்கில் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.இந்த விமானம் சீன விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறப்பதற்கான…

Read more
கஸ்ஸப-தேரரின்-கடைசி-கனவும்-தகர்ந்துவிட்டது!

கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!

கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது! திருகோணமலை காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்…

Read more
இலங்கையில்-தங்கத்தின்-விலை-மேலும்-உயர்வு!

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு!

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு! மதுரி Tuesday, February 03, 2026 இலங்கை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (03) ரூ.12,000 அதிகரித்துள்ளது.அதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை…

Read more
ஷிராந்தி-நிதிக்-குற்றப்-புலனாய்வுப்-பிரிவில்-வந்தபோது-என்ன-நடந்தது?

ஷிராந்தி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வந்தபோது என்ன நடந்தது?

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிரிலிய’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டார்.அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி…

Read more

தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன்

Tuesday, February 3, 2026 தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன்  இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது….

Read more

“கிரிப்டோவில் அமெரிக்காவே முதலிடம் வகிக்க வேண்டும்!” – அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்! – Global Tamil News

கிரிப்டோகரன்சி (Cryptocurrency) துறையில் அமெரிக்கா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக “நாம் கிரிப்டோ துறையில் முன்னிலை வகிக்கவில்லை என்றால், சீனா அந்த இடத்தைப் பிடித்துவிடும்,” என டிரம்ப் எச்சரித்துள்ளார். தொழில்நுட்பப் போட்டியில்…

Read more