யாழில். காணியற்றவர்களுக்காக 15 ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்துள்ள சிவகுரு ஆதீனம்

யாழில்.-காணியற்றவர்களுக்காக-15-ஏக்கர்-காணியை-அன்பளிப்பு-செய்துள்ள-சிவகுரு-ஆதீனம்


ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலன் சுவாமி உள்ளிட்ட அங்கத்தவர்களுக்குமிடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், ஊர்காவற்றுறையில் காணியற்று இருப்பவர்களுக்கு காணி வழங்க முன்வந்தமைக்காக நன்றிகள். காணியினை முறையாக பங்கீடு செய்து, பங்கீட்டின் அளவிற்கு ஏற்ப வீடமைப்புத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தலா 2 மில்லியன் ரூபாவில் ஒரு குடும்பத்திற்கான வீடமைப்புத் திட்டம் வழங்க முடியும்.மேலும், அக் காணியில் குடிநீர், மின்சார இணைப்பு மற்றும் வீதி நிர்மாணிப்பு போன்ற உட்கட்டுமான அபிவிருத்தியினை மேற்கொண்டு ஒரு அமைதியான கிராமமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தினர், தங்களால் வழங்கவுள்ள 15 ஏக்கர் காணியில் – 10 ஏக்கர் காணியில் காணியற்ற குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்காக வழங்கவும், 05 ஏக்கரில் ஒரு ஏக்கர் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தேவைக்காக வழங்கவும், மிகுதி ஆதீனம் மற்றும் பொதுத் தேவைப் பயன்பாட்டிற்காக பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்து, தொடர்ச்சியான சட்டரீதியான கையளிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

Related Posts

⚖️ கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி  – Global Tamil News

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரோ…

Read more

பிரித்தானிய  வரி உயர்வு – 59 வாகனங்களுக்கு £5,690 வரி! – Global Tamil News

பிரித்தானியா , வரி உயர்வு, Road Tax , பிரித்தானியாவில் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வீதி வரி (Road Tax) உயர்வு, குறிப்பாக அதிக புகை வெளியேற்றும் சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக வாகன உரிமையாளர்களுக்குப் பெரும்…

Read more

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி – Global Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.P.T. டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம்,…

Read more

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! – Global Tamil News

கெஹெலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல கைது! by admin February 3, 2026 written by admin February 3, 2026 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நெருங்கிய உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இன்று (பெப்ரவரி 03) காலை கைது…

Read more

விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி…

Read more

யாழில். சர்வதேச ஈர நில தின கொண்டாட்டம் – Global Tamil News

“ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் “எனும் தொனிப்பொருளில்  சர்வதேச உலக ஈர நில தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது. அந்த வகையில் யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், நல்லூர் பிரதேச…

Read more