யாழில் உலக கிண்ணம்! – Global Tamil News


யாழில் உலக கிண்ணம்! by admin February 1, 2026 written by admin February 1, 2026 ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் கடந்த 21ஆம் திகதி அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, உலகக் கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டது. Related News

Related Posts

📢 அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு! – Global Tamil News

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் எதிர்காலமான சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 📊  குறைந்த வயதில்  கர்ப்பமடைதல்: 2024-ஆம் ஆண்டுடன் (53 பேர்) ஒப்பிடுகையில், 2025-இல்…

Read more

விண்வெளியில் 'சூப்பர் கம்ப்யூட்டர்' சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்!  – Global Tamil News

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் (FCC) விண்ணப்பித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! எதற்காக இத்தனை செயற்கைக்கோள்கள் என்ற கேள்விகள்…

Read more
மறவன்புல-சச்சிதானந்தத்திற்கு-பகிரங்க-எச்சரிக்கை!

மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை!

மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை! தமிழ் மக்களுக்குள் மதப்பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என சிவசேனை மறவன்புல சச்சிதானந்தத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளருமான சுகிர்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்த மண்டப திறப்பு விழா நிகழ்வின் போதே அத்தகைய அறிவிப்பினை…

Read more
நல்லூர்-:-வெளியே-கப்!

நல்லூர் : வெளியே கப்!

நல்லூர் ஆலய சூழலிற்கு எடுத்து வரப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆலய நிர்வாக அறிவிப்பின் பிரகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.நல்லூர் ஆலயத்தை குறிப்பாக முன் பக்கத்தை சுற்றியுள்ள வேலிக்குள் வாகனங்கள் கொண்டு செல்லவோ , செருப்புடன் செல்லவோ அனுமதியில்லை. விளம்பர நோக்கங்களுடன் , பாடல்கள் , திருமண…

Read more
இலங்கைக்கு:2000-கோடி-இலங்கை-ரூபா!

இலங்கைக்கு:2000 கோடி இலங்கை ரூபா!

தூயவன் Sunday, February 01, 2026 இந்தியா, இலங்கை சீனாவின் கரங்களில் வீழ்ந்துவரும் இலங்கைக்கு நிதிகளை அள்ளிவீசி தனது பக்கம் ஈர்க்க இந்தியா தொடர்ந்தும் முயன்றுவருகின்றது.இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை…

Read more
அனைத்து-ஐரோப்பிய-ஒன்றிய-இராணுவங்களையும்-பயங்கரவாதக்-குழுக்களாக-அறிவித்தது-ஈரான்

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய இராணுவங்களையும் பயங்கரவாதக் குழுக்களாக அறிவித்தது ஈரான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய முடிவுக்கு தெஹ்ரான் ஒரு குறியீட்டு எதிர் நடவடிக்கையுடன் எதிர்வினையாற்றுகிறது, இதன் மூலம் ஈரானுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான அரசியல் மோதலை தீவிரப்படுத்துகிறது.நாடு தழுவிய போராட்டங்களை இரத்தக்களரியாக ஒடுக்கியதற்காக, நாட்டின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படையை பயங்கரவாதக் குழுவாக அறிவித்ததைத்…

Read more