அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! by admin January 31, 2026 written by admin January 31, 2026 அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைவடைந்து வருவதும், குடியேற்றம் எதிர்பார்த்த அளவு இல்லாததுமே இதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மக்கள் தொகை வளர்ச்சி அதன் பொருளாதார வலிமையின் அடையாளமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது இளம் தலைமுறை திருமணம், குழந்தைப் பேறு போன்ற முடிவுகளை தள்ளிப் போடுவதும், வாழ்கைச் செலவுகள், வேலை பாதுகாப்பு இல்லாமை, சுகாதாரச் செலவுகள் போன்ற காரணங்களும் பிறப்பு விகித சரிவுக்கு வழிவகுக்கின்றன. இந்த மக்கள் தொகை குறைவு எதிர்காலத்தில் தொழிலாளர் சந்தை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், ஓய்வூதிய அமைப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது அமெரிக்கா மட்டும் அல்ல, பல வளர்ந்த நாடுகள் எதிர்கொண்டு வரும் ஒரு உலகளாவிய போக்காகவும் பார்க்கப்படுகிறது. Related News