117 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது


 சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று (28) திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இந்த 117 முட்டைகளையும் கொண்டு சென்றுகொண்டிருந்த போதே கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் ஆமை முட்டைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனஜீவிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts

யாழில்.-மாவைக்கு-சிலை-திறப்பு

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில்…

Read more

🎾 “ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!” – Global Tamil News

அவுஸ்திரேலிய ஓபன் (Australian Open) டென்னிஸ் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic), தன்னை ஓய்வு பெறச் சொன்னவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. தனது வயதையும் உடல்நிலையையும் சுட்டிக்காட்டி…

Read more

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சினால் தகவல்கள்…

Read more

காத்தான்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது

 காத்தான்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது: ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் பஸ் தரிப்பு நிலைய வேலைத்திட்டத்திற்கு அனுமதி..!——————————————காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதற்காக கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள்…

Read more

👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்! – Global Tamil News

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை சேவையின் முக்கிய பிரிவுகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதிக்  காவல்துறை மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே….

Read more

📜  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்: – Global Tamil News

இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Security Ordinance)…

Read more