60 சதவீத சாரதிகள் போதைக்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க


 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார். “நாங்கள் நடமாடும் ஆய்வகங்களைப் பயன்படுத்தி பெஸ்டியன் மாவத்தையில் சுமார் 53 பஸ்களைப் பரிசோதித்தோம். அங்கு 10 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தனர். இதன் மூலம் சாரதிகளில் சுமார் 16 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரியவந்தது. இருப்பினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். பரிசோதனை நடத்தப்பட்ட மறுநாள் ஏராளமான சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காததன் மூலம் அதனை நாம் உணர்ந்துகொண்டோம். அவர்கள் நிச்சயமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், அதனால்தான் அன்றைய தினம் சோதனைக்கு அஞ்சி பணிக்கு வரவில்லை” என அமைச்சர் விவரித்தார். மேலும் அவர் கூறுகையில், “இதுவே தற்போதைய நிலைமை. இவர்களில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு நாம் சிகிச்சை அளிப்போம். ஆனால், அடாவடித்தனமாகச் செயற்பட இடமளிக்கப் போவதில்லை. தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். இனிவரும் காலங்களில் கனரக சாரதி அனுமதிப்பத்திரம் (Heavy Vehicle License) இருந்தாலும், பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கு முறையான பயிற்சியின் பின்னர் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அத்தகையவர்களுக்கு மாத்திரமே மீண்டும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட முடியும்” எனத் தெரிவித்தார்.

Related Posts

⚖️ இஸ்ரேலில்  மாணவி பாலியல் துஸ்பிரயோகம் – இலங்கையா் கைது! – Global Tamil News

இஸ்ரேலில் கல்வி பயின்று வரும் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்து வந்த இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு…

Read more

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்குமிடையில் கைகலப்பு- காயமடைந்த நபர் வைத்தியசாலையில் – Global Tamil News

மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணியின் போது, மன்னார் நகரசபைத் தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வீதிகளில் கிரவல்…

Read more
தமிழரசு:கதிரை-போராட்டத்திற்கே-சரியானது!

தமிழரசு:கதிரை போராட்டத்திற்கே சரியானது!

இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போராட்டத்திற்குமான கட்சியாக தான் செயற்பட்டு வருகிறது . விசேடமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரன் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து இருந்தாலும் மீண்டும் அவரது அதிகாரத்தை…

Read more
அனுரவிற்கு-ஆட்டம்?

அனுரவிற்கு ஆட்டம்?

இலங்கையில் தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றொரு புதிய பெயரை முன்மொழிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்;.அரசியலமைப்பு சபை நாளை (31) கூடவுள்ள நிலையில இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி…

Read more
வாயாலே-வடை-:அனுர-ஆட்சி!

வாயாலே வடை :அனுர ஆட்சி!

ஜனாதிபதி புயலால் பாதிக்ககப்பட்டவர்களிற்கு காணி தருவதாக, வீடு தருவதாக, நஸ்ட ஈடு தருவதாக ஏதோவெல்லாம் சொன்னார். ஆனால் கேவலம் ஆரம்ப கொடுப்பனவான 25ஆயிரம் ரூபாய்கூட எங்களுக்கு தரவில்லையென மலையக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.அண்மையில் இலங்கையை உலுக்கிய அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த மலையகத் தமிழ்…

Read more

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

 வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை மறுதினம் (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர்…

Read more