அருச்சுனாக்கு அச்சுறுத்தல் – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை – Global Tamil News


தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராசா தனகோபி , சிவரூபன் லகீந்தன் , மனோகரன் பிரதீபன் ஆகிய மூவர் உட்பட ஆறு பேர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக தெல்லிப்பழை  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட ஆறு பேரையும் தெல்லிப்பழை காவல்துறையினா்  டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காவல் நிலையத்திற்கு அழைத்து , தனித்தனியே வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பழை  காவல்துறையினா் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டது.

Related Posts

பிரிட்டிஷ்-குடிமக்கள்-விசா-இல்லாமல்-சீனா-செல்ல-அனுமதி

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த…

Read more
உலக-சந்தையில்-தங்கத்தின்-விலை-வரலாற்றில்-முதல்-முறையாக-5,500-டாலர்களை-தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக…

Read more

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை! – Global Tamil News

பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு அனுமதியை (Visa-free entry) சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது,…

Read more
நாவற்குழியில்-சிங்கள-வீடுகள்-விற்பனைக்கு!

நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு!

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது.சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில்…

Read more
சுமந்திரன்-அழைப்பு:தகுதியில்லை-கஜேந்திரகுமார்!

சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு…

Read more

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…

Read more