புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்!


2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவமானது, 2026.01.21 ஆம் திகதியிடப்பட்ட 2472/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாகவோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் செயலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கட்சி அங்கீகரிக்கப்படுமிடத்து, 2026.01.13 ஆம் திகதியிடப்பட்ட 2471/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட (ஆ) அட்டவணையில் உள்ள கட்சிச் சின்னங்களில், அந்தக் கட்சிக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ள எதிர்பார்க்கும் சின்னத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கு மேலதிகமாக கட்சியின் யாப்பு, உத்தியோகத்தர் குழாம் பட்டியல், கடந்த நான்கு வருடங்களுக்கான பெண் உத்தியோகத்தர்களின் பெயர்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு முன்னரான நான்கு வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கைகள், கட்சியின் தற்போதைய கொள்கைப் பிரகடனம் மற்றும் அரசியல் கட்சியொன்றாகக் குறைந்தது கடந்த நான்கு வருடங்களாவது தொடர்ச்சியாகச் செயற்பட்டதை உறுதிப்படுத்துவதற்காகச் சமர்ப்பிக்கக்கூடிய அனைத்து ஆவணங்களையும் தனித்தனி கோப்புகளாகச் சமர்ப்பிக்க வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அவற்றை, உரிய கட்சியின் செயலாளரினால் தேர்தல் ஆணைக்குழுவிற்குப் பதிவுத் தபாலில் அனுப்புவதன் மூலமோ அல்லது நேரடியாக வருகை தந்து கையளிப்பதன் மூலமோ சமர்ப்பிக்க முடியும். குறித்த விண்ணப்பங்களை அனுப்பும்போது, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2026′ எனக் குறிப்பிடப்பட வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை தலைவர், தேர்தல் ஆணைக்குழு, சரண மாவத்தை, இராஜகிரிய என்ற முகவரிக்கு அனுப்புமாறும் அல்லது அலுவலகத்திற்கு வருகை தந்து கையளிக்குமாறும் அவர்கள் அறிவித்துள்ளனர். விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

🚨 பாணந்துறையில்  போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது! – Global Tamil News

பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து…

Read more
1

1

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான…

Read more

🏛️  இலங்கைக்கு செல்லும் IMF முகாமைத்துவ பணிப்பாளர் – Global Tamil News

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும், அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கவும் இந்த…

Read more

காரைநகரில் துரித கெதியில் புனரமைக்கப்படும் வீதிகள் – Global Tamil News

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படும் நிலையில் , அவற்றின் சில வீதிகள் புனரமைப்பு முடிவுடையும் தருவாயில் காணப்படுகிறது. துரித கெதியில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற…

Read more

பண்டத்தரிப்பில் இருந்து   இராணுவம்  வெளியேற்றம் – பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – Global Tamil News

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி ,  காணியை மானிப்பாய் பிரதேச…

Read more

22 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) காலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். குறித்த பெண்ணை…

Read more