Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அனுர அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு வெள்ளியன்று தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு நிரகரிப்பு தொடர்பில் ஊடக சந்திப்பை மேற்கொண்டு கருத்து தெரிவித்த சுயேச்சை குழுவின் தலைவர் சுலக்சன் யாழ்ப்பாணம், கோப்பாய், வேலணை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்ததனை சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் யாழ் மாநகரின் வேட்புமனு பெண் வேட்பாளரது உறுதியுரை குறித்த விடயம் தொடரிலான சர்ச்சையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் சட்டத்தின் பிரகாரமே வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தோம்.
அதன்படி யாழ் மாநகரில் எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாம் சட்ட ஆலிசகர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம். அதன்படி தேர்தல் திணைக்களத்தின் அறிவுப்புக்கு எதிராக நாம் நியாயம் கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் என்றும் சுலக்சன் தெரிவித்துள்ளார்.