2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்


  2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் தேசிய விழா, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.இதேவேளை, வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய கூறுகிறார். முதலாம் தரத்தில் இணையும் பிள்ளைகளுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்து பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி பெற்றோரின் பொருளாதாரத்தில் தீர்மானிக்கப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், கல்வியிலிருந்து எந்தவொரு பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஆறாம் தர புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டாலும், அதன் மூலம் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கூறுகிறார். காலி பகுதியில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Related Posts

அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக  பரப்பப்படும் அவதூறுகளுக்கு   கண்டனம். – Global Tamil News

மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக  போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு  வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

Read more

அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது – Global Tamil News

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை…

Read more

புகையிலை, மதுபானம் காரணமாக ஆண்டுதோறும் 22,000 உயிரிழப்பு

 புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…

Read more

வணிகம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,000 டாலரை தாண்டியது

 வரலாற்றில் முதல் முறையாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. அதற்கமைய, இன்று (29) அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. நேற்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…

Read more

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த சவுதியை எவரும் பயன்படுத்த முடியாது! – Global Tamil News

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், சவுதி அரேபியா வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சவூதி அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான்,…

Read more
அரச-உத்தியோகஸ்தர்கள்-மீது-நம்பிக்கையில்லா-காரணத்தால்-தான்-பிரஜா-சக்தி-உருவாக்கப்பட்டதாம்

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டதாம்

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது.பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை…

Read more