பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர், பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர் பிரிவு மக்களும், மனோன்மணி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் விவசாயிகள் கௌரவிப்பு, சாதனையாளர்கள் கௌரவிப்பு, கலைஞர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் M. ஜெகதீஸ்வரன் அவர்களும், சமய தலைவர்கள் மற்றும் மனோன்மணி அறக்கட்டளையின் நிர்வாகத்தினர், பாடசாலை அதிபர்கள் அரச அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புகள், கிராம மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் 2025ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள், பல்கலைக்கழகத்தில் தமது கல்வியை தொடர்புபவர்கள், HNDA கற்போர், கல்வியற் கல்லூரியில் தமது கல்வியை தொடர்பவர்கள், முன்மாதிரியான கலைஞர்கள் கிராமத்தின் சிரேஸ்ர விவசாயிகள் கௌரவிக்கப் பட்டதோடு பல சிறப்பான கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது