2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி, ‘அரகலய’ என அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு பிரதிவாதிகளாக பெயரிட்டு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரகலய மக்கள் போராட்டத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், நாடு முழுவதும் பரவிய வன்முறையின் போது, பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த சம்பவங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அரசால் முன்னாள் அமைச்சர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இழப்பீட்டு தொகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக, ▪️ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ▪️ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ▪️ முன்னாள் ஐஜிபி சி.டி. விக்ரமரத்ன, ▪️ முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, ▪️ முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ்,▪️ மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த அடிப்படை உரிமைகள் மனுவை சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல வழக்கறிஞர் டாக்டர் ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, அரகலய காலகட்டத்தில் அரச அதிகாரத்தின் பயன்பாடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறு தொடர்பான முக்கியமான சட்ட முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. #Aragalaya #May09 #FundamentalRights #GotabayaRajapaksa #SriLanka #RuleOfLaw #Accountability #HumanRights #Justice #Democracy