ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


 நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ந்து நிலவும் நிர்வாக வினைத்திறனின்மை காரணமாக, பயணிகள் மட்டுமன்றி ரயில் ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் நிலைய அதிபர்களைச் சேர்ப்பது மற்றும் பதவி உயர்வு தொடர்பில் அவசியமான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. இது ரயில் நிலைய அதிபர்களின் கடமை வினைத்திறனிலும், ஊழியர்களின் மனநிலையிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனர்த்தக் கடன்  தொகையானது ரூ. 400,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், ரயில்வே திணைக்களத்தினால் அந்தத் தொகையை ரூ. 250,000/- வரை குறைத்து வழங்கத் தீர்மானித்திருப்பது பாரிய பிரச்சினை என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் செயற்பாடானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தீர்மானத்தை நேரடியாக அவமதிப்பதாக அமைவதோடு, ரயில் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்பதால், அது தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவையை முறையாகத் திட்டமிடாமை, கால அட்டவணைகள் சீர்குலைவு மற்றும் செயற்பாட்டு பலவீனங்கள் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதுடன், இந்த நிலைக்குத் திணைக்கள நிர்வாகமே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts

📈 இலங்கை சாியான பாதையில் பயணிக்கின்றது –  IMF   – Global Tamil News

இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) புயல்…

Read more

தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக   GMOA எச்சாிக்கை – Global Tamil News

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு  ஆக்கபூர்வமான  முறையான தீர்வை வழங்கத் தவறினால்   எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்…

Read more

🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு! – Global Tamil News

சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளமை உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை…

Read more

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – GMOA

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு…

Read more

இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஐரோப்பா இனி மிக அருகில்! ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்! – Global Tamil News

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தம் (Mobility Pact) ஜனவரி 27, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர…

Read more

பாலைப்பெருமாள்கட்டு பொங்கல் நிகழ்வும்,கௌரவிப்பு நிகழ்வும் – Global Tamil News

பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (ஜனவரி 27, 2026) விவசாயிகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் உழவர் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கிராம அலுவலர் திரு S. லுமா சிறி தலைமையில், அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்,  பாலைப்பெருமாள்கட்டு…

Read more