
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குச் செல்வதற்காக அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த புகார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ஆகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையில் வாக்குமூலம் அளிக்க வந்திருந்தபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அதன்படி, இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னிலையாகத முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு வந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவும் அங்கு இருந்தனர்.