காங்கேசன்துறை பொது சந்தை மீண்டும் சொந்த இடத்தில்

காங்கேசன்துறை-பொது-சந்தை-மீண்டும்-சொந்த-இடத்தில்


யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை பொது சந்தை மீண்டும் சொந்த இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய நிலையில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்காது உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னரான கால பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பொது சந்தையை மீள சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு , சந்தை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் , மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருகை தருவது குறைவாக இருந்தமையால் , வியாபாரிகள் மரக்கறி விற்பனையை கைவிட்ட நிலையில் , சந்தை கட்டடமும் மூடப்பட்டது. இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை மீள தெரிவான நிலையில் , சந்தையை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சொந்த இடத்தில் இயங்க செய்வது எனவும் , சந்தையை சூழவுள்ள பகுதிகளில் வீதியோர மரக்கறி விற்பனை , கடைகளில் மரக்கறி விற்பனையை இடைநிறுத்தி , சந்தையில் மாத்திரம் மரக்கறி விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், சந்தை கட்டடத்தில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளையும் விரைந்து ஏற்படுத்தி கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைவில் சந்தை வியாபார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , சந்தையில் வியாபாரத்திற்கு இடம்பெற்ற ஒருவர் இன்றைய தினமே தனது வியாபர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள்…

Read more

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு கோட்டை…

Read more

📌 2022 மே 09 – அரகலய மீதான தாக்குதல்: கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு – Global Tamil News

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி, ‘அரகலய’ என அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள்…

Read more

சமன் ஏகநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையானார்! – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அழைக்கப்படுகிறார்) புதன்கிழமை (28) கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையின் அடிப்படையில், இந்த…

Read more

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி! – Global Tamil News

மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார் (66), இன்று காலை பாராமதி அருகே ஏற்பட்ட கோரமான விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனே மாவட்டம், பாராமதி…

Read more
பிரஜா-சக்திக்கு-எதிராக-பருத்தித்துறை-பிரதேச-சபையில்-தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை தவிசாளர் சபையில் முன் வைத்தார். அதனை அடுத்து…

Read more