எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜார்ஜ் இயோ-பூனைச் சந்தித்தார்


 ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-யோங்-பூனைச் (George Yeo Yong-Boon) சந்தித்தார்.சிங்கப்பூரில் அமைந்துள்ள லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்திலேயே (Lee Kuan Yew School of Public Policy – LKYSPP) இச்சந்திப்பு இடம்பெற்றது.முற்போக்கான தலைமைத்துவம், வலுவான நிறுவனங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் தாக்கம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு சிங்கப்பூர் எவ்வாறு வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொண்டது என்பது குறித்து இந்த கலந்துரையாடலில் இருதரப்பினரும் பிரதானமாக கவனம் செலுத்தினர்.தனிப்பட்ட பிம்பத்தின் மீது மட்டும் சார்ந்து இல்லாமல் ஈடுகொடுக்கும் கட்டமைப்புகள் மற்றும் பொறிமுறையாள்கைகளை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அனுபவங்களிலிருந்து நாட்டிற்கு பாடங்கள் கற்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நீண்டகால மூலோபாயத் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான அதன் இயலுமை குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.அவ்வாறே, தேசிய பேரிடர்கள் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளின் தாக்கங்களை உள்ளடக்கியவாறு இலங்கை சமீப காலங்களில் பல பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்து ஜார்ஜ் இயோ பூனுக்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிறுவன ஆற்றலை வலுப்படுத்துதல், ஏற்றுமதி சந்தைகளைப் பன்முகப்படுத்துதல், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் வெளிநாட்டு பொருளாதார உறவுகள் போன்ற துறைகளில் விசேட நிபுணத்துவ வாண்மையை முன்னேற்றுவதன் அவசியம் என்பனவற்றையும் அவர் எடுத்துரைத்தார்.மேலும், இச்சந்திப்புக்கு மத்தியில்,​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, முன்னாள் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-பூன் அவர்கள், பொதுக் கொள்கை முடிவெடுப்பதற்கான எதிர்கால பன்முக பங்குதாரர் பட்டறைகள் மூலம் இலங்கையுடன் நேரடியாக தொடர்புபட்டு, சிங்கப்பூரின் அரசாளுகை, பொருளாதார முன்னுதாரண மாற்றம், வெளியுறவுக் கொள்கையின் மூலோபாயம் மற்றும் தொழில்நுட்ப தடைகளை முகாமைத்துவம் செய்வதில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தார்.ஜார்ஜ் இயோ அவர்கள், சிங்கப்பூர் அமைச்சரவையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளதோடு, தகவல் மற்றும் கலை விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.இவரது இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கைக்கான பங்களிப்புகளுக்காக தலைசிறந்த இராஜதந்திரியாகவும், மூலோபாய சிந்தனையாளராகவும் சர்வதேச அளவில் பரவலாக மதிக்கப்படும் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வருகிறார்.

Related Posts

மத்திய மலைநாட்டை மீட்க புதிய புரட்சிகரமான திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார்! – Global Tamil News

இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது வெறும் நிர்வாக மாற்றமல்ல, மலைநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு பசுமைப் புரட்சி என்கிறார்…

Read more

   புத்தர்சிலை  வைத்த  வழக்கு  – பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை அமைத்தமை மற்றும் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோட்டை வீதி, டச்பே (Dutch Bay) கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டதாகத்…

Read more

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறை  – Global Tamil News

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயோன் ஹி (Kim Keon Hee) அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாதங்கள் (1 வருடம் 8 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026)…

Read more

லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை – Global Tamil News

குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் “புராஜெக்ட் சன்ரைஸ்” (Project Sunrise) திட்டம், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் லண்டன் – சிட்னி இடையிலான இந்த இடைவிடாத (Non-stop) விமான சேவை தொடங்கவுள்ளது. இதற்காக…

Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பொருத்தமற்றது – Global Tamil News

அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 28, 2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மீனவ கூட்டுறவு…

Read more
நிதியைத்-தவறாகப்-பயன்படுத்தியமை:-நீதிமன்றில்-முன்னிலையானர்-ரணில்!

நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை: நீதிமன்றில் முன்னிலையானர் ரணில்!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி…

Read more