கல்விச் சீர்திருத்தம் ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரமல்ல, அது நாட்டின் எதிர்காலம் – சாந்த பண்டார


 கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் காணப்படுகின்ற குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்து, முறையான மற்றும் திட்டமிட்ட ரீதியில் அதனை விரைவாகச் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்விச் சீர்திருத்தங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன கல்வி ஊழியர் சங்கம் ஆகியன தற்போதைய அரசாங்கத்திடமும் கல்வி அமைச்சிடமும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்குச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்த போதிலும், கல்வி அமைச்சினதும் அது சார்ந்த குழுக்களினதும் தவறு காரணமாக கல்விச் சீர்திருத்தங்கள் மேலும் ஒரு வருடம் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகச் சாட்டிய அவர், இதற்கான முழுப் பொறுப்பையும் கல்வி அமைச்சே ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.கல்வித்துறை சார்ந்த இத்தனை அறிஞர்கள் இருக்கும் ஒரு சபையினால் இக்குறைபாடுகளைக் கண்டறிய முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுவதாகவும், கல்விச் சீர்திருத்தங்களை அரசாங்கம் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பாடசாலைகளில் உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார்.இந்தியாவின் ஒடிசாவிலுள்ள KIIT பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், குடியரசு தின விழாவில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தைப் பற்றியோ அல்லது நாட்டைப் பற்றியோ அவதூறு பரப்புவதைப் போலன்றி, நாமல் ராஜபக்ச ஒரு முதிர்ச்சியான இளம் தலைவராக நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அங்கு உரையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கிடைத்த இந்த கௌரவத்தை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, அரசியல் லாபத்திற்காக மடைமாற்ற முனையக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்மேலும், தற்போது நடைபெற்று வரும் கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் என்பது கிராமப்புற மக்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே முன்னொரு காலத்தில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கிராம மட்டத்தில் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

Related Posts

40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் – யாழ். மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு! – Global Tamil News

40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து,…

Read more

கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல் தொடர்பில் கலந்துரையாடல்! – Global Tamil News

கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் ம. பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் மற்றும் 28ஆம்…

Read more

இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் காலமானார்

 விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார்  உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை அவர் பயணித்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர்…

Read more
மகாராஷ்டிரவில்-விமான-விபத்து:-மாநில-துணை-முதலமைச்சர்-அஜித்-பவார்-உட்பட-6-பேர்-உயிரிழப்பு.

மகாராஷ்டிரவில் விமான விபத்து: மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்றைய தினம் புதன்கிழமை  பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்மும்பையிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம்,பாராமதி…

Read more
தமிழரசின்-தலைவர்-செயலாளரையும்-சந்தித்த-கனேடிய-உயர்ஸ்தானிகர்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன்  நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் அக்…

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு

Wednesday, January 28, 2026 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு Zameera   January 28, 2026  கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…

Read more