நாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்


மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சமூகத்தில் இழந்து வரும் அனைத்து தார்மீகப் பண்புகளையும் மீண்டும் கொண்டுவருவதற்காக நாட்டின் அனைத்துத் துறைகளிலும்  புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.அதன்போது, கிராமங்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏனைய சிரமங்களை அனுபவிக்கும் கிராமப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மதத் தலங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் பங்களிக்கும்  திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.மாத்தளை நகரத்திலிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில், மாத்தளை-தம்புள்ள பிரதான வீதிக்கும் மாத்தளை-கலேவெல வீதிக்கும் இடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கவடயாமுன மகா விகாரை, முழு பௌத்த சமூகத்தாலும் வெளிநாட்டு பக்தர்களாலும் போற்றப்படும் மிகவும் புனிதமிக்க விகாரையாகும்.டித்வா சூறாவளியால் மாத்தளை மாவட்டத்தில் 51 மதத் தலங்களுக்கு முழுமையாக அல்லது பகுதியளவு சேதம் ஏற்பட்டது. அந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் பண்டைய கவடயாமுன ரஜமகா விஹாரையின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி அடையாள ரீதியில் ஆரம்பித்து வைத்தார்.மல்வத்து தரப்பின் மாத்தளை மகாசபையின் பிரதம சங்கநாயக்க, வண. மஹலகொடுவே விமலதம்ம நாயக்க தேரர், அஸ்கிரி தரப்பின் மாத்தளை மகாசபையின் பிரதம சங்கநாயக்க,  வண. கொஸ்கொல்லே சீலரதன தேரர், அகில இலங்கை சாசனரக்ஷக குழுவின் செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர், கவடயாமுன ரஜமஹா விகாரையின் விகாராதிபதி, அகில இலங்கை சமாதான நீதவான் வண. உடுமுல்லே சுமண நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்,  மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் பியன்வில, தினேஷ் ஹேமந்த, தீப்தி வாசலகே உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.சேனாதீர, மாத்தளை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts

40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் – யாழ். மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு! – Global Tamil News

40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து,…

Read more

கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல் தொடர்பில் கலந்துரையாடல்! – Global Tamil News

கச்ச தீவு திருவிழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலர் ம. பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் மற்றும் 28ஆம்…

Read more

இந்தியாவில் விமான விபத்து – மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் காலமானார்

 விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார்  உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை அவர் பயணித்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர்…

Read more
மகாராஷ்டிரவில்-விமான-விபத்து:-மாநில-துணை-முதலமைச்சர்-அஜித்-பவார்-உட்பட-6-பேர்-உயிரிழப்பு.

மகாராஷ்டிரவில் விமான விபத்து: மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு.

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்றைய தினம் புதன்கிழமை  பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்மும்பையிலிருந்து புறப்பட்ட குறித்த விமானம்,பாராமதி…

Read more
தமிழரசின்-தலைவர்-செயலாளரையும்-சந்தித்த-கனேடிய-உயர்ஸ்தானிகர்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன்  நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் அக்…

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு

Wednesday, January 28, 2026 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு Zameera   January 28, 2026  கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்…

Read more