Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் 338 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பகுதியில் பெருந்தொகை கஞ்சா போதை பொருள் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவற்றை கைப்பற்றினர்.
கடற்கரையில் 154 பொதிகளில் காணப்பட்ட சுமார் 338 கிலோ கிராம் கஞ்சா காணப்பட்டது. அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒரு தொகை டீசல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.