அமெரிக்காவின் பெரும்பகுதியை வாட்டி வதைக்கும் கடும் குளிர் மற்றும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. ஆர்க்டிக் காற்றோட்டம் காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை குறைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடும் குளிர், பனிச்சறுக்கல் காரணமாக ஏற்பட்ட வாகன விபத்துகள் மற்றும் உடல் வெப்பநிலை குறைவு (Hypothermia) காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசி, நியூயோர்க், இல்லினாய்ஸ் மற்றும் வோஷிங்டன் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பனிப்புயல் காரணமாக மின்கம்பங்கள் சேதமடைந்து ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் சாலைகளில் பனி மூடியிருப்பதால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. “அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்,” என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Tag Words: #USWeather #WinterStorm #ArcticBlast #BreakingNews #ColdWave #SafetyAlert #SnowStorm #ClimateCrisis #LKA
❄️ அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் குளிர் – உயிாிழப்பு 29 ஆக உயர்வு! – Global Tamil News
5