இந்தியாவின் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டு, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அடிப்படையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பயங்கரமான குற்றவாளி ‘கெசல்வத்த தினுஷா’ என்ற தினுஷா சதுரங்கவிடம் வாழைத்தோட்ட காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச காவற்துறையினரால் (Interpol) சர்வதேச பிடிவிறாந்து சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இவர் இந்தியப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டிருந்தாா். கொழும்பு மத்திய பிரிவு மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் விசேட ஒப்புதலுடன், வாழைத்தோட்ட காவல்துறையினர் தினுஷாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்தமை தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராக இன்டர்போல் (Interpol) மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த இவரை, இந்திய பாதுகாப்பு பிரிவினர் சென்னையில் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர். போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மற்றும் கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல பாரிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தத் தடுப்புக் காவல் காலப்பகுதியில், இலங்கையில் அவர் மேற்கொண்ட ஏனைய குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள ஏனைய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் குறித்த தகவல்களைத் திரட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். Tag Words: #KeselwattaDinusha #RedNotice #Interpol #SriLankaPolice #Extradition #OrganizedCrime #LKA #ColomboNews #BreakingNewsSL
⚖️ இந்தியாவில் கைது செய்யப்பட்டகெசல்வத்த தினுஷா'விடம் 72 விசாரணை – Global Tamil News
4