இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 10 இந்திய மீனவர்கள்; பாம்பனில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்த குடும்பத்தினர்

by ilankai

எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்யக்கோரி மீனவர்களின் உறவினர்கள் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பாம்பன்  தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த ஆகஸ்ட் மாதம் 5ந்  திகதி  எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களுக்கு இந்திய தொகையில் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் அபராத தொகையும்,கட்ட தவறும் பட்சத்தில் 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மீனவர்கள் பத்து பேரும்  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கடந்த நான்கு மாதங்களை கடந்து சிறையில் இருப்பதால் மீனவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ராமேஸ்வரம் வரும் வாகனம் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் சாலையின் அணிவகுத்து நிறுத்தப்பட்டது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  பாம்பன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கொழும்பில் உள்ள இலங்கை மேல் நீதிமன்றத்தில் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என கூறியதால் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Posts