கண்டி தலதா மாளிகையில் குண்டு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 28 ஆண்டுடன் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இக் குண்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் எனவும், காயங்களுக்குள்ளானவர்கள் நற்குணம் பெற வேண்டும் எனவும் வேண்டி சமய வழிபாடுகள் இடம்பெற்றனகண்டி தலதா மாளிகை விஷ்ணு தேவாலய முன்றலில் இன்று காலை இச் சமய வழிபாடுகள் இடம்பெற்றன.இறைவனால் படைக்கப்பட்ட மனித நேயம் இனிமேலும் இவ்வாறான எந்த ஒரு புன்னிய பூமி மீதும் தாக்குதல் மேற்கொள்ள கூடாது என வலியுறுத்தி இவ் வழிபாடுகள் இடம்பெற்றன.சமய வழிபாடுகளில் பெருந்திரளான சிங்கள மக்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.1998 ஜனவரி 25 ஆம் திகதி லொறியொன்றில் வந்த தற்கொலைக் குண்டுதாரிகளினால் தலதா மாளிகை தாக்குதலுக்குள்ளானது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததோடு பெளத்த சமயத்தின் புனிதத் தலமான தலதா மாளிகை சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
குண்டு தாக்குதல் இடம்பெற்று 28 ஆண்டுடன் நிறைவு; தலதா மாளிகையில் இன்று விசேட வழிபாடுகள்
2