3
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனத்தையும் மேலும் ஒரு வெறுமனே சென்ற டிப்பர் வாகனத்தையும் சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.அத்துடன் இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மற்றும் பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் கொண்டு சென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரது டிப்பர் வாகனமே சிறப்பு அதிரடி படையினாரால் கைப்பற்றபட்டுள்ளது.