கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன்: டிரம்ப் மிரட்டல்

கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன்: டிரம்ப் மிரட்டல்

by ilankai

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலால் கனடா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷியா கைப்பற்றிவிடும் என அவர் கூறி வருகிறார். ஐரோப்பிய நாடுகள். அமெரிக்கா மற்றும் உலக அமைதிக்கு கிரீன்லாந்து தங்கள் வசம் இருப்பது முக்கியம் என்று டிரம்ப் கூறி வருகிறார். மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார். டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கனடா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தச் செயற்பாடு அமெரிக்காவை கடும் சினம் கொண்டது.

Related Posts