“கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாட்டின் கல்வித்துறையில் நிலவும் ஒரு பாரதூரமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயத்தை நான் இந்தச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்” என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நாடாளுமன்றில் சஜித் தரப்பை வறுத்தேடுத்துள்ளார். கடந்த 2015-2019 காலப்பகுதியில் (மைத்திரி-ரணில்-சஜித் ஆட்சிக்காலத்தில்) அச்சிடப்பட்ட பாடப்புத்தகம் ஒன்றில், மாணவர்களுக்கான மேலதிக வாசிப்புத் தகவல்களுக்காக வழங்கப்பட்ட ஒரு இணையதள முகவரி (Link), தற்போது ஒரு ஆபாச இணையதளத்திற்கு (Pornographic Link) இட்டுச் செல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தவறு இடம்பெற்று சுமார் 9 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், கல்வித் திணைக்களமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதனைத் திருத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்றும் எமது நாட்டு மாணவர்கள் அதே பாடப்புத்தகத்தையே பயன்படுத்தி வருகின்றனர். நவீன தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் நிலையில், கடந்த அரசினால் வழங்கப்பட்ட புத்தகத்திலேயே இவ்வாறான தவாறான வழிகாட்டல்கள் இருப்பது கண்டிக்கத்தக்கது. இது எமது பிள்ளைகளின் ஒழுக்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். எனவே, கல்வி அமைச்சு இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அந்தப் புத்தகங்களை மீளப் பெறவோ அல்லது குறித்த பக்கத்தை நீக்கவோ அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஹிந்த ஜெயசிங்க வலியுறுத்தி உள்ளார். இதேவேளை 6 ஆண்டு பாடத்திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் தவறான இணைப்பை பாடப்புத்தகத்தில் பதிவிட்டதற்கு பிரதமர் பதவி விலகவேண்டும் என நம்பிக்கையில்லாப் பிரேரனையை சஜித்தரப்பு கொண்டுவர முனந்தமை குறிப்பித்தக்கது. ________________________________________ குறிப்பு! 1. தொழில்நுட்பக் கோளாறு: பொதுவாக பழைய இணையதள முகவரிகள் (Domains) காலாவதியாகும் போது, அவற்றை ஆபாசத் தளங்கள் அல்லது விளம்பரத் தளங்கள் விலைக்கு வாங்கிவிடுவதுண்டு. இதுவே இங்கும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. 2. இதற்கு முன்னரும் சில தரம் 10 மற்றும் 11 பாடப்புத்தகங்களில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் போது தவறான தளங்களுக்குச் சென்றதாக புகார்கள் எழுந்தன. 3. பாடப்புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்படும் போதெல்லாம் அதில் உள்ள இணையதள இணைப்புகள் (Links) சரியாக வேலை செய்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கடமையாகும்.
ஆளும் தரப்பு VS எதிர்தரப்பு – மைத்திரி-ரணில்-சஜித் ஆட்சியில் அச்சிடப்பட்ட புத்தகத்திலும் தவறான இணைப்பு! – Global Tamil News
3