4
கொழும்பில் தனக்கு கிடைக்கும் அழைப்புக்களிற்கெல்லாம் எம்.ஏ.சுமந்திரனை அழைத்து சென்று நன்றி பாராட்டிவருகிறார் சாணக்கியன்.ஆஸ்திரேலியா தின வரவேற்பு நிகழ்வு ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு மேத்யூ டக்வர்த் வழங்கிய உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நடைபெற்றது. ஆஸ்திரேலியா தின வரவேற்பு நிகழ்வில் கலந்து இலங்கை–ஆஸ்திரேலியா நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சி சார்பாக தானும்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார் இரா.சாணக்கியன்.