Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (22) அன்று கைது செய்யப்பட்ட இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொணட் எட்டாவது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், இன்று செவ்வாய்க்கிழமை (26) சரீரபிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவி வகித்தகாலத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதற்கான பயணத்தில்; ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதற்காக மொத்தமாக 166 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விளக்கமறியல் உத்தரவுக்கு பின்னர் கைவிலங்கிடப்பட்டு, சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்பட்டு, புதிய மகசின் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், ரணிலின் உடல் நிலை மோசமாக இருந்தமையால், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இதனிடையே ரணிலிற்கு ஆதரவாக அவரது கட்சியினரும் ஏனைய கட்சிகளது தலைவர்களும் இன்று ஆர்ப்பாட்டங்களை கொழு;பில் முன்னெடுத்திருந்தனர்.