4
கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவிளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60மிமீ வெடிக்காத குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர், பின்னர் அவர்கள் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்குவருகை தந்த கிளிநொச்சி பொலிசார் குறித்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.