2
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்திலிருந்து, நேற்றிரவு சுமார் 7 மணியளவில் யுவதி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ளார்.சம்பவத்தை அறிந்த பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிஸார், அந்த யுவதியை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் தாழங்குடா – சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.