4
பிளக்வாட்டர் அம்மன் கோயில் வீதி புனரமைப்பு பணி இன்று (23) ஆரம்பமாகியுள்ளது.ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் அம்பகமுவ பிரதேசபை சபை உறுப்பினர் இரா.ஜீவன் இராஜேந்திரன் நிதி ஒதுக்கீட்டில் கினிகத்தேன வைபவ ரீதியாக அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தல மற்றும் உறுப்பினர் இரா. ஜீவன் இராஜேந்திரன் ஆகியோரால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பகமுவ பிரதேசசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்டக்கிளை தலைவர் மதியோகராஜா மற்றும் தோட்ட பொது மக்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.