Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரவுரிமை அமையம் தெரிவித்துள்ளது
மிகத் தொன்மையான வழிப்பாட்டுத் தலமான வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் அதனை மீள் உருவாக்கம் செய்வதற்குரிய பணிகள் யாழ்ப்பாணம் மரவுரிமை அமையத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டடது.
குறித்த பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தினை அடைந்து இருக்கும் நிலையில் மிக விரைவில் கும்பாவிஷேகம் நடாத்தி மக்களின் வழிபாட்டுத் தலாமாக்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கின்ற கைதடியினைச் சேர்ந்த கலாநிதி சிவயோகநாதனின் மகளும் Meta நிறுவனத்தில் பணிபுரிகின்ற வருபவரான பாலயோகஸ்தினி சிவயோகநாதன் இவ்வாலயத்தை பழைய நிலைக்கு மீள் உருவாக்கம் செய்வதற்குரிய நிதியுதவியினை வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆலயம் மீள் எழுச்சி கண்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்ட்டை செய்தல், எண்னைக் காப்பு சாத்தல், கும்பாவிஷேகம் தொடர்பான விபரங்கள் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும்.
எமது மரவுரிரைச் சின்னங்களினை பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறை தலைமுறை தலைமுறையாக கடந்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் 2021 ஆம் ஆண்டு அப்போதையை யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் காலத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை அமையமானது,
நல்லூர் இராஜதானியின் தோரண வாசல் மீள் உருவாக்கம், ஆனைக்கோட்டை அகழ்வாராய்ட்சி, போன்றவற்றினை நிறைவேற்றிய நிலையில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலயத்தின் மீள்உருவாக்கப் பணி யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் 3ஆவது செயற்றிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.