Monday, August 25, 2025
Home பிபிசிதமிழிலிருந்துசெர்ஜியோ கோர்: ஈலோன் மஸ்கால் “பாம்பு” என விமர்சிக்கப்பட்டவர் இந்தியாவுக்கான தூதரா? – BBC News தமிழ்

செர்ஜியோ கோர்: ஈலோன் மஸ்கால் “பாம்பு” என விமர்சிக்கப்பட்டவர் இந்தியாவுக்கான தூதரா? – BBC News தமிழ்

by ilankai
0 comments

செர்ஜியோ கோர்: ஈலோன் மஸ்கால் “பாம்பு” என விமர்சிக்கப்பட்டவர் இந்தியாவுக்கான தூதரா?காணொளிக் குறிப்பு, செர்ஜியோ கோர்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இவர் யார்?செர்ஜியோ கோர்: ஈலோன் மஸ்கால் “பாம்பு” என விமர்சிக்கப்பட்டவர் இந்தியாவுக்கான தூதரா?

30 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப் போவதாகக் கூறினார்.

banner

டிரம்ப் நிர்வாகத்தில், கோர் தற்போது ‘அதிபர் பணியாளர்கள் நியமன தலைவராக’ (Head of Presidential Personnel Appointments) உள்ளார். தூதராக அவரது நியமனம் இன்னும் அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தியா அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், கோர் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படுகிறார். மறுபுறம், இந்தியாவும் சீனாவும் நெருக்கமாகி வருவதாகத் தெரிகிறது.

“இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்தார்.

“அதிபர் பணியாளர் இயக்குநராக, செர்ஜியோவும் அவரது குழுவும் நமது மத்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் கிட்டத்தட்ட 4,000 ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ ஆதரவாளர்களை மிகக் குறைவான நேரத்தில் பணியமர்த்தியுள்ளனர். செனட் சபை உறுதிப்படுத்தும் வரை, வெள்ளை மாளிகையில் செர்ஜியோ தனது தற்போதைய பணியைத் தொடர்வார்.”

விரிவாக காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like