முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட சட்டமா அதிபருடன் தொடர்ந்தும் பணியாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.சட்டமா அதிபரின் நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை .சட்டமா அதிபர் பராபட்சத்துடன் பணியாற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. எனினும், எங்களுக்க அப்படி எதுவும் தெரியவில்லை. சட்டமா அதிபர் அவருடைய பணிகளை சீராகவே மேற்கொண்டு வருகிறார். அவருடைய பணிகளில் அரசாங்கத்துக்கு எவ்வித இடையூறுகளோ, பிரச்சினைகளோ இல்லை. ஆகவே, தற்போதைய சட்டமா அதிபருடன் அரசாங்கம் தொடர்ந்தும் பணியாற்றும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதேவேளை, சட்டமா அதிபரை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என நீதி அமைச்சர் நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சட்டமா அதிபரை நீக்குவது குறித்து அமைச்சரவைக்குள் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
ரணிலின் சட்டமா அதிபர் பரவாயில்லையாம்?
7
previous post