வரி ஏய்ப்பு முயற்சி: டட்லி சிறிசேனவின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்குப் பாரிய அபராதம்! – Global Tamil News

by ilankai

இலங்கை வரலாற்றில் சொகுசு வாகன இறக்குமதியில் இடம்பெற்ற முக்கிய வரி ஏய்ப்பு மோசடியொன்றை இலங்கை சுங்கத் திணைக்களம் முறியடித்துள்ளது. பிரபல தொழிலதிபரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசெனவின் சகோதரருமான டட்லி சிறிசேன (Dudley Sirisena) என்பவரால் இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) சொகுசு கார் தொடர்பான விசாரணையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இந்த சொகுசு காரின் உண்மையான விலையை மறைத்து, குறைவான விலையைக் காண்பித்து (Under-invoicing) வரி ஏய்ப்பு செய்ய முயன்றது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து சுங்க வரி சட்டதிட்டங்களை மீறியமைக்காகவும், தவறான விலை அறிவிப்பை வழங்கியமைக்காகவும் 70 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசுக்குச் செலுத்த வேண்டிய உண்மையான வரியாக 370 மில்லியன் ரூபாய் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, வரி ஏய்ப்பில் ஈடுபடும் பெரும் தொழிலதிபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ________________________________________ இந்த வாகனம் அண்மையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போது, அதன் பெறுமதி குறித்த சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. நீண்ட விசாரணைகளின் பின்னரே, சந்தை விலையை விட மிகக் குறைவான விலை காட்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ________________________________________

Related Posts