Sunday, August 24, 2025
Home tamil newsசுமந்திரன் ரணில் வீட்டில் இருந்தா அறிக்கை வெளியிட்டார் ? – Global Tamil News

சுமந்திரன் ரணில் வீட்டில் இருந்தா அறிக்கை வெளியிட்டார் ? – Global Tamil News

by ilankai
0 comments

ரணிலை விளக்கமறியலில் வைத்தது தவறு என தொனிப்பட அறிக்கையை,  ரணில் வீட்டில் இருந்தா சுமந்திரன் வெளியிட்டார் என  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில். இன்றைய தினம் (24.08.25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , அது தவறு என தொனிப்பட சுமந்திரன் கருத்து சொல்லி இருப்பதாக அறிகிறோம்.

அவர் அதனை ரணிலின் வீட்டில் இருந்தா கூறினார் ? என சந்தேகிக்கிறோம் கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை , படுகொலைகள் செய்யப்பட்டமை , தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை , தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் என்பவற்றுக்கு காரணமான ஒருவரை கைது செய்து இருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.

banner

அவர் ரணிலுடன் நெருக்கமானவர். சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம். ஆனால் எமது ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமம். குற்றம் செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்தார்.

You may also like