Saturday, August 23, 2025
Home tamil newsயாழில். வாள் வெட்டு – மட்டக்களப்பு வாசி உயிரிழப்பு! – Global Tamil News

யாழில். வாள் வெட்டு – மட்டக்களப்பு வாசி உயிரிழப்பு! – Global Tamil News

by ilankai
0 comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் , மட்டக்களப்பை சேர்ந்த கடற்தொழிலாளி  சின்னத்தம்பி வடிவேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு , சுண்டிக்குளம் பகுதியில் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் வாடி அமைந்து , கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  (22.08.25) இரவு வாடியில் இருந்த இரு கடற்தொழிலாளர்களுக்கு இடையில் , கருத்து மோதல் ஏற்பட்டு , வாள் வெட்டில் முடிந்தது.

அதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

banner

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like