Saturday, August 23, 2025
Home இலங்கைரணிலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரை

ரணிலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரை

by ilankai
0 comments

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் அதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். 

banner

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர். 

அதன்படி, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதி இதற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You may also like