முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (23) வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்கள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்அரசாங்கத்திற்குச் சொந்தமான சதொச (Sathosa) நிறுவனத்தின் லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சருடன் கைது செய்யப்பட்டவர்களில் அவரது இரண்டு மகன்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ________________________________________
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்! – Global Tamil News
9