Saturday, August 23, 2025
Home இலங்கைநாமல் , மைத்திரியை தொடர்ந்து ரணிலை பார்க்க சென்ற சஜித்

நாமல் , மைத்திரியை தொடர்ந்து ரணிலை பார்க்க சென்ற சஜித்

by ilankai
0 comments

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று பார்வையிட்டார். 

இன்றைய தினம் சனிக்கிழமை காலை சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளை நேற்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கோட்டை நீதிமன்றில் முற்படுத்திய போது, நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

banner

You may also like