Saturday, August 23, 2025
Home யாழ்ப்பாணம்யாழில். வெற்றிலை மென்று கொண்டு உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு 40 ஆயிரம் தண்டம்

யாழில். வெற்றிலை மென்று கொண்டு உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு 40 ஆயிரம் தண்டம்

by ilankai
0 comments

பருத்தித்துறையில் வெற்றிலை மென்ற வண்ணம் உணவு பரிமாறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் , உணவகத்தின் முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. 

பருத்தித்துறை பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெற்றிலை மென்ற வண்ணம் உணவினை கையாண்டமை, பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டு , அவற்றுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்கு விசாரணைகளின் போது , முகாமையாளர் மற்றும் , உணவு கையாளும் நபர் ஆகியோர் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்களை கடுமையாக எச்சரித்து, 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது 

You may also like