Saturday, August 23, 2025
Home tamil newsரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! – Global Tamil News

ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! – Global Tamil News

by ilankai
0 comments

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏற்றிக் கொண்டு சிறைச்சாலை பேருந்து  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டது. கைவிலங்கிடப்பட்ட நிலையில் அவர் வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

banner

You may also like