தையிட்டி சட்டவிரோத விகாரை பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என அவர் காலக்கெடு விடுத்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவதுடன் தையிட்டி பிரச்சினை சுமூகமான முறையில் விரைவில் தீர்க்கப்படும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கப்படுவதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுப்போம். 37 வருடங்களாக மூடப்பட்டிருந்த துறைமுகத்தை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
மேலும் கடவுச்சீட்டு பெறுவதற்காக இதுவரையும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு வந்தவர்களுக்காக எதிர்வரும் முதலாம் திகதி முதல் கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தையிட்டியில் கட்டப்பட்ட விகாரையை தொடர்ந்தும் பாதுகாக்க ஏதுவாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களிற்கு நிவாரணம் வழங்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.