முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், விக்ரமசிங்கவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைப் பராமரிக்க அவர் மட்டுமே உள்ளார் என்றும் அவர் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் பிணை மனுவை பரிசீலிக்கும்போது சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு முன்னதாக அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படடிருந்தார்.
ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.