Friday, August 22, 2025
Home கொழும்புயார் தவறு செய்தாலும் மன்னிப்பு இல்லை!

யார் தவறு செய்தாலும் மன்னிப்பு இல்லை!

by ilankai
0 comments

யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர இந்த அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. அதனை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம் . வீழ்ச்சியடைந்திருந்த சட்டத்தின் ஆட்சியை தற்போது நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இல்லாமல் போயிருந்த நீதியை, நியாயத்தை இந்த சமூகத்துக்கு வழங்கி வருகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

 அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் இந்த நாடு குற்றவாளிகளின் தேசமாகவும் ஒட்டுமொத்த சமூகமும் வீழ்ச்சியடைந்திருந்தது. அரச பொறிமுறை பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி மக்களுக்கு அரச சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்துவந்தது. இவ்வாறான நிலையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். 

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது, தேசிய மட்டத்தில் வருமானம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பொருளாதார தரவுகளை பார்க்கும்போது அரசாங்கத்தின் 10 மாதங்களில் நாட்டின் பொருளதாார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப எங்களுக்கு முடிந்திருக்கிறது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்தமை எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

You may also like