கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிக் குழு ஒன்று காவல்துறையினரின் உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
உலங்கு வானூர்தியில் பயணித்த எட்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.
ஆன்டிகுவியா துறையில் உள்ள அமல்ஃபி நகருக்கு அருகில் நடந்த தாக்குதலை, இடதுசாரி கெரில்லா அமைப்பான ஃபார்க்கிலிருந்து பிரிந்த குழு நடத்தியதாக நம்பப்படுகிறது.
கோகோ வயல்களை அழிக்க இரண்டு உலங்கு வானூர்திகளை காவல்துறை அதிகாரிகளை அனுப்பினர். காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகளை அடுத்து உலங்கு வானூர்களை அவர்கள் திரும்பினர். இருப்பினும் உலங்கு வானூர்தி ட்ரோன் மூலம் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளானது என ஆளுநர் ரெண்டன் எக்ஸ் நியூஸ் தளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் விபத்து நடந்த இடத்திற்கு மேலே ஒரு கருப்பு புகை மண்டலம் காணப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கோகோயின் உற்பத்தியாளராக கொலம்பியா உள்ளது. அரசாங்கத்திற்கும் அப்போதைய மிகப்பெரிய கிளர்ச்சிக் குழுவான ஃபார்க்கிற்கும் இடையே 2016 ஆம் ஆண்டு கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமை மேம்பட்டிருந்தாலும், நாட்டின் சில பகுதிகள் இன்னும் சட்டவிரோத குழுக்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.