யுக்ரேன் பாதுகாப்புக்கு டொனெட்ஸ்க் பகுதி ஏன் முதுகெலும்பு? இதனை இழந்தால் என்னவாகும்?
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, சாலையில் அமைக்கப்பட்ட டிரோன் எதிர்ப்பு வலைகள்எழுதியவர், பேட்ரிக் ஜாக்சன்பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அலாஸ்காவில் நடந்த சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள பகுதிகளை யுக்ரேன் ஒப்படைத்தால், தற்போதைய போர் முனைப் பகுதியில் போரை நிறுத்த விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டொனெட்ஸ்க் மற்றும் அதற்கு அருகிலுள்ள லுஹான்ஸ்க் பகுதிகள் மோதலின் மையமாக இருந்துள்ளன.
கடுமையான மோதலுக்குப் பிறகு, டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தலைநகரம் உட்பட, சுமார் 70% பகுதியை ரஷ்யா தற்போது கட்டுப்படுத்தி வருகிறது.
டொனெட்ஸ்க் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றினால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத அதன் உரிமை கோரல் வலுவடையும். அதே நேரத்தில், பெரிய ராணுவ இழப்புகளைத் தவிர்க்கவும் அது உதவும்.
ஆனால் யுக்ரேன் மேற்கு டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறினால், நிலத்தை இழப்பதோடு, மக்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு உருவாகும். மேலும், ரஷ்யாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பு அரணையும் இழக்க நேரிடும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதனால், இந்த பகுதி ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
யுக்ரேனின் கட்டுப்பாட்டில் இன்னும் எந்தெந்த பகுதிகள் உள்ளன ?
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, டொனெட்ஸ்க் பகுதியில் யுக்ரேன் இன்னும் சுமார் 6,600 சதுர கிலோமீட்டர் (2,548 சதுர மைல்) நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தி வருகிறது.
அந்த பகுதியில் சுமார் கால் மில்லியன் மக்கள் இன்னும் வசித்து வருகின்றனர் என சமீபத்தில் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
முக்கிய நகர்ப்புற மையங்களாக கிராமடோர்ஸ்க், ஸ்லோவியன்ஸ்க், கோஸ்ட்யாண்டினிவ்கா மற்றும் ட்ருஷ்கிவ்கா ஆகியவை உள்ளன.
இது யுக்ரேனின் முக்கிய தொழில்துறை பகுதியான டான்பாஸின் (டோனெட்ஸ் பேசின்) ஒரு பகுதியாகும். ஆனால், போரால் அந்தப் பகுதியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
“உண்மையில், நிலத்தில் உள்ள கண்ணி வெடிகளால் இந்த வளங்களை குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்திற்கு பயன்படுத்த முடியாது…” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மற்றும் கிழக்கு ஐரோப்பிய அரசியல் துறை விரிவுரையாளர் முனைவர் மார்னி ஹவ்லெட் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
“இந்த நிலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன, இந்த நகரங்கள் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன”என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், EPA/Shutterstock
படக்குறிப்பு, கடந்த மாதம் கிராமடோர்ஸ்க் தாக்குதலுக்கு உள்ளானதுராணுவ ரீதியாக இந்தப் பிரதேசத்தின் மதிப்பு என்ன ?
அமெரிக்காவைச் சேர்ந்த ‘Institute for the Study of War’ (ISW) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், மேற்கு டொனெட்ஸ்க் வழியாக 50 கிலோமீட்டர் நீளத்தில் பரவியுள்ள பாதுகாப்பு வளையம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த 11 ஆண்டுகளாக யுக்ரேன் இந்த பாதுகாப்பு வளையத்தை வலுப்படுத்துவதற்கும், முக்கியமான பாதுகாப்பு தொழில்துறை மற்றும் தற்காப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நேரம், பணம் மற்றும் முயற்சிகளை பெரிதும் செலவிட்டுள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
பதுங்கு குழிகள், கண்ணிவெடிகள், டாங்கிகள் அல்லது பிற ராணுவ வாகனங்களை நிறுத்த வடிவமைக்கப்பட்ட சாதனங்கள் மற்றும் முள்வேலிகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இந்த பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்ரோவ்ஸ்க்கை நோக்கி தாக்குதல் நடத்தும் ரஷ்யப் படைகள், “அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்” என ஐஎஸ்டபிள்யூ (ISW) மதிப்பீடு செய்கிறது.
யுக்ரேனின் பாதுகாப்பு திட்டங்களில் பாதுகாப்பு வளையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில், நிலப்பரப்பும் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது
“அந்த நிலப்பரப்பு தற்காப்புக்கு ஏற்றதாகவே உள்ளது, குறிப்பாக உயரமான பகுதியான சாசிவ் யார் யுக்ரேனின் பாதுகாப்பை தாங்கி நிற்கிறது,” என பிரிட்டனின் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) நிலப்பரப்பு போர் ஆராய்ச்சியாளராக உள்ள நிக் ரெனால்ட்ஸ் பிபிசி செய்தியிடம் கூறுகிறார்.
ஆனால், “டான்பாஸ் மற்றும் கிழக்கு யுக்ரேனின் நிலப்பரப்பைப் பார்த்தால், மொத்தத்தில் அது யுக்ரேனியர்களுக்கு சாதகமாக இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
”டொனெட்ஸ்க் நகரம் உயரமான பகுதியில் உள்ளது. மேற்கு நோக்கிச் செல்லும்போது நிலம் கீழ்நோக்கி சாய்ந்திருப்பதால், தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் யுக்ரேனியர்களுக்கு சவாலாக இருக்கிறது.”
“இது வெறும் அருகில் நடக்கும் போர் அல்லது மேடு பள்ளங்களில் நடப்பதில் உள்ள சிரமம் பற்றியது மட்டும் அல்ல. கண்காணிப்பும் பாதிக்கப்படுகிறது. அதனால், டிரோன்கள் இல்லாமல் பீரங்கித் தாக்குதல்களையும் பிற தாக்குதல் ஆதரவையும் ஒருங்கிணைப்பது கடினமாகிறது.”
“அதேபோல், உயரமான பகுதிகள் ரேடியோ அலை பரவலுக்கும், டிரோன்களை ஒருங்கிணைப்பதற்கும் சிறந்தவை.”
பின்னர், ரஷ்யர்கள் சமீபத்தில் கைப்பற்றியதாகக் கூறிய சாசிவ் யார் குறித்து பேசிய ரெனால்ட்ஸ், “அது யுக்ரேனியர்கள் கட்டுப்படுத்தும் உயரமான நிலங்களில் கடைசி பகுதிகளில் ஒன்றாகும்” எனக் கூறுகிறார்.
செயற்கைக்கோள் படங்களின் மூலம் கிடைக்கும் உளவுத்தகவல் (சர்வதேச கூட்டாளிகள் அல்லது வணிக நிறுவனங்கள் வழங்கியவை) முக்கியமானவை என கூறும் அவர், ஆனால், “அது ஒருவரின் சொந்த உத்தி சார்ந்த பணிகளை நேரடியாக ஒருங்கிணைப்பதற்குச் சமமாகாது” எனவும் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், 24 Mechanised brigade via EPA
ரஷ்ய ராணுவத்திற்கு டொனெட்ஸ்க் முழுமையாக தேவையா?
மேற்கு டொனெட்ஸ்க், 1,100 கிலோமீட்டர் நீளமுள்ள போர் முனையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால், இந்த கோடையில் ரஷ்யப் படைகள் இந்த பகுதியில் மிகவும் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ரஷ்யா தனது தரைப்படைகளை வேறு திசையில் அனுப்பினால் கூட, அவர்கள் அதைவிட சிறப்பாக முன்னேறுவார்களா என்பது சந்தேகம் தான்.
“தெற்கில், ஜாபோரிஜியாவில் உள்ள போர் முனை இப்போது டான்பாஸைப் போலவே உள்ளது. எனவே, அங்கும் விரிவான தற்காப்பு நிலைகள் வழியாகப் போராட வேண்டியிருக்கும்,” என்று ரெனால்ட்ஸ் கூறுகிறார்.
“வடக்கிலும் ரஷ்யர்கள் அதே சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே, அவர்கள் எளிதாக முன்னேற முடியாது.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.யுக்ரேன் தனது பாதுகாப்பை மேற்கு நோக்கி மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?
கோட்பாட்டளவில், ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால், யுக்ரேனியர்கள் தடுப்பு அரணை மேலும் மேற்கு நோக்கி நகர்த்தலாம்.
ஆனால், சாதகமற்ற நிலப்பரப்பு ஒரு பிரச்னையாக இருக்கும். மேலும் ஆழமான பாதுகாப்பு அமைப்புகளை கட்டுவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
ஆனால், கோட்பாடு ஒரு புறம் இருக்க, யுக்ரேனிய ராணுவம் போரில் ஈடுபடாமல் மேற்கு டொனெட்ஸ்கை கைவிடுவதை கற்பனை செய்ய முடியவில்லை என்று ரெனால்ட்ஸ் கூறுகிறார்.
”அமெரிக்க ஆதரவு அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்களை டிரம்ப் நிர்வாகம் காரணம் காட்டினாலும் யுக்ரேன் அந்தப் பகுதியை விட்டுக்கொடுக்க விரும்பும் நிலையில் இல்லை,” என அவர் விளக்குகிறார்.
யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, போர்நிறுத்தத்திற்குப் பதிலாக டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என ரஷ்யா முன்மொழிந்தால், அதனை யுக்ரேன் நிராகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
ஏனெனில், அந்த பகுதி எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு தளமாகப் பயன்படுத்தப்படலாம் என்பது அவரது வாதமாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு